Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் தளவாய்அள்ளி ஊராட்சிக்குட்பட்டது நேரு நகர். நேரு நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கானை சுடுகாடு இடத்தை தனி நபர் ஒருவருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்ததால், நேரு நகருக்கு சுடுகாடு இடம் இல்லாமல், இயற்கை மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் திமுக அரசு சுடுகாடு வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் கிராம மக்கள் கடந்த 5 ம்தேதி முதல் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடியேற்றி பேனர் வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,
போராட்டம் வலுப்பெற்று உண்ணாவிரத போராட்டமாக மாறியது
அதன் தொடர்ச்சியாக இன்று பொம்மை சடலத்திற்கு பாடை கட்டி ஊர்வலமாக தூக்கி வந்து வருவாய்த்துறையினர் அரசு கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தை தனியாருக்கு பட்டா கொடுத்த இடத்தின் அருகே வைத்து ஒப்பாரி வைத்து அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN