Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 09 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டன் புதூரில் குடியிருந்து வருபவர் காளிமுத்து சுலேகா தம்பதியினர். காளிமுத்து மின்சார துறையில் பணிபுரிந்து தற்போது பணி ஓய்வு பெற்று இங்கு குடியிருந்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகன் மகள் இருவருக்கும் திருமணம் ஆகி உள்ள நிலையில் தம்பதி இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 65 பவுன் நகை, ஒரு வைரத்தோடு மற்றும் ரொக்க பணம் 45 ஆயிரம், சுமார் ஆறு கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷிப்ட் காரில் எடுத்துச் சென்றுள்ளனர்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல்களின் பெயரில் அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மாவட்ட எஸ்பி பிரதீப் மற்றும் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் ஆய்வாளர் தங்கராசு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இரவோடு இரவாக கார் மற்றும் தங்க நகைகள் ரொக்க பணம் வைர நகை திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து அங்கு பொருத்தி வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam