Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;
அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.
ஆனால், அரசியல் வரம்பை மீறி தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏற்க முடியாதது என்றும் கூறினார்.
மேலும், இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்கள் தொடர்ந்தால், அதற்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
தேர்தல் சூழலில் அரசியல் நாகரிகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
அதிகாரிகள் மாற்றத்தால் திமுகவிற்கு என்ன கஷ்டம்.
நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதிமுகவின் கோட்டையாக தேர்தல் களம் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam