திருப்பூரில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு-மனைவியை கொடூரமாக கத்தியால் குத்திய கணவன்
திருப்பூர், 09 ஏப்ரல் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த ரகு (30) மற்றும் அவரது மனைவி ஜோதி (20) ஆகியோருக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறால், ஜோதி மூன்று மாதங்களுக்கு முன்பு ரகுவை விட்டு பிரிந்து திருப்பூருக்கு வந்து குமாரசாமி நகர்
கொலை


திருப்பூர், 09 ஏப்ரல் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த ரகு (30) மற்றும் அவரது மனைவி ஜோதி (20) ஆகியோருக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறால், ஜோதி மூன்று மாதங்களுக்கு முன்பு ரகுவை விட்டு பிரிந்து திருப்பூருக்கு வந்து குமாரசாமி நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து, அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், ஜோதியை சந்திக்க கடலூரில் இருந்து திருப்பூருக்கு வந்த ரகு, அவர் வசித்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியின் கழுத்துப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

பின்னர் ரகு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜோதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய ரகுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam