Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரியில் ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் (AINRC), பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை இணைந்து மீண்டும் ஆட்சியமைக்கப் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் புதுவை ராஜ்பவன் தொகுதி எல்லையம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் முன்னாள் முதல்மைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள வஉசி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது:-
புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது.
ஸ்டாலின், ராகுல் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்து வாக்குறுதி அளித்ததின் எதிரொலியாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b