Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 340 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,200க்கும், சவரனுக்கு ரூ.2,720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.11,650க்கும் சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.93,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P