அரசு கண் மருத்துவமனையில் மின்வயர்களை திருட்டு -3 பேர் கைது
சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி பழைய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தில் உள்ளே மருத்துவமனை வாட்ச்மேன்கள் ரோந்து அலுவலக இருந்த பொழுது பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் பூட்டப்பட்டு இருந்த கத
Ja


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி பழைய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தில் உள்ளே மருத்துவமனை வாட்ச்மேன்கள் ரோந்து அலுவலக இருந்த பொழுது பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் பூட்டப்பட்டு இருந்த கதவுகளை உடைத்து உள் சென்று அங்கிருந்து எலக்ட்ரிக் ஒயர்களை திருடினர்.

இதனை கண்ட காவலாளிகள் பிடிக்க முயன்ற போது தப்பி விட்டனர். அங்கு இருந்து 50 மீட்டர் அளவுள்ள ஒயர்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை RMO டாக்டர் செந்தில் குமார் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் இதே போன்ற கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட புதுப்பேட்டையைச் சேர்ந்த அருண் என்ற ஆபிரகாம், மோகன், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ