கேரளாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பொதுமக்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
கேரளா , 09 ஏப்ரல் (ஹ.ச.) கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாநிலம் முழுவதும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த அட்டவணைப்படி, கேரளத்துடன் அசாம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று வ
K


கேரளா , 09 ஏப்ரல் (ஹ.ச.)

கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாநிலம் முழுவதும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த அட்டவணைப்படி, கேரளத்துடன் அசாம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மொத்தம் 883 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இடது முன்னணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்க, காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பொதுமக்களுடன் இணைந்து மோகன்லால், மம்முட்டி, டொவினோ தாமஸ், சுரேஷ் கோபி உள்ளிட்ட நடிகர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA