Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 09 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ் - திமுக கூட்டணி, சீமானின் நாதக, விஜயின் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
அதேபோல, கேரளாவில் 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இதில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணியும், ஆண்ட காங்கிரஸ் கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவர்களுக்கு மாற்றாக பாஜக களத்தில் உள்ளது. அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், தொடர்ந்து 2 முறை வென்ற பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்ற களமாடுகிறது.
மறுபுறம், ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி காலை 10 மணி நிலவரப்படி, இதுவரை 16.23% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதே போல, புதுச்சேரியில் 17.41% வாக்குகளும்,அசாமில் 17.87% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
காலை 11.30 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 37.06% வாக்குகளும், அசாமில் 38.92% வாக்குகளும்,கேரளாவில் 33.28% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam