Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச)
சிதம்பரத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் “மாணவர்கள் குரல்: மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்ந்த சிலர் கூட்டத்தில் புகுந்து, ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது.
ஆனால், அந்த உரிமையை மதிக்காமல் மாணவர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத செயலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ