புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் - வாக்காளர்களை வரவேற்கும் ரோபோட் 'நிலா'
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதலே தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களிக்க முன்வந்து வாக்கு அளித்துக் கொண்டிருக்க
Nila', a Robot, Welcomes Voters.


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதலே தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களிக்க முன்வந்து வாக்கு அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

புதுச்சேரியில் மொத்தம்9.5 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.

மொத்தம் 294 வேட்பாளர்கள் 30 தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் அமைந்திருக்கக் கூடிய வி.ஓ.சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் நிலா என்ற பெயர் கொண்ட ரோபோட் வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்றது.

நிலா ரோபோ பாரம்பரிய உடையான தாவணியை அணிந்து கையில் பூத்தட்டை ஏந்தியபடி வாக்காளர்களுக்கு பூக்கொடுத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் இந்த முன்னெடுப்பை பல வாக்காளர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்த முன்னெடுப்பு அதிகளவிலான வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வர வைக்கும் முயற்சி என்பதால் இது மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b