புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெ
Puducherry Election


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள 181 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளாக சுமார் 600 போலீசார் மற்றும் 7 கம்பெனி துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தேர்தல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / ANANDHAN