தன் சொந்த மக்களால் ஆளப்படும் புதுச்சேரிக்காக வாக்களியுங்கள் - ராகுல் காந்தி
புதுடெல்லி , 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்துத் தலைவர்கள் பிரசாரம்
தன் சொந்த மக்களால் ஆளப்படும் புதுச்சேரிக்காக வாக்களியுங்கள் - ராகுல் காந்தி


புதுடெல்லி , 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்துத் தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 37.06% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று எக்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்பு மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் கவர்னர் அரசராக திகழ்ந்து டெல்லி ஆட்சியை அமலாக்குகிறார். புதுச்சேரியை இங்குள்ள மக்கள் ஆள அதிகாரம் வேண்டும். அதற்கு மாநில அந்தஸ்து தேவை. அதில் உறுதியாக இருக்கிறோம்.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை 6 மாதங்களில் நடத்துவோம். கருத்தியல் ரீதியிலான மோதல் வெறுப்பை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ் தரப்புக்கும் அன்பு, ஒற்றுமைக்கான காங்கிரஸ் கூட்டணிக்கு இடையில் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் அறிக்கையை புதுச்சேரி வளர்ச்சிக்கு உகந்ததாக வடிவமைத்துள்ளோம். பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை, ரூ. 20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளோம். அதிக மெஜார்ட்டியை புதுச்சேரியில் காங்கிரசுக்கு தாருங்கள்.

உங்கள் அரசை மீட்டெடுக்க வாக்கைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் குரலை ஒலிக்க செய்ய வாக்கை பயன்படுத்துங்கள்... தன் சொந்த மக்களால் ஆளப்படும் புதுச்சேரிக்காக வாக்களியுங்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு ராகுல்காந்தி பதிவில் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b