புதுச்சேரி,அசாம்,கேரளா சட்டசபை தேர்தலில் பெருந்திரளாக வாக்களிக்க வேண்டும் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அழைப்பு
சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.) அசாம், கேரளம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள
Lmurugan


Nn


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

அசாம், கேரளம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்த மாநிலங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சியாக அமையும் என்பதால், மாநில முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ