Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்துத் தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தனர்.
அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவையை அடுத்துள்ள சுகாகாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது தாயார் லீனா, அவரது மனைவி பீனாவுடன் வந்து வாக்களித்தார். அவரது தாயார் லீனா சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,
ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது முதன்மையான கடமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b