புதுச்சேரி வாக்குச்சாவடியில் மோதல் – போலீஸ் தடியடி
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 16-வது வாக்குச்சாவடியில் இன்று காலை பதற்றமான சூழல் ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களின் ஆதரவாளர் ஒருவர் வாக்குச்சாவடி உள்ளே நின்
போலீசார் தடியடி


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 16-வது வாக்குச்சாவடியில் இன்று காலை பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களின் ஆதரவாளர் ஒருவர் வாக்குச்சாவடி உள்ளே நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர்,தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக கூறி அவரை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் அவர் வெளியே வர மறுத்ததால்,காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சில நேரத்தில் அது தள்ளுமுள்ளு நிலைக்கு மாறியதால் அங்கு பதற்றம் அதிகரித்தது.

நிலையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தலையீடு செய்தனர்.

கூட்டம் சிதறாமல் மேலும் மோசமடையும் சூழல் உருவானதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு தொடர்ந்து அமைதியாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மோதல் காரணமாக சில நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும்,பின்னர் நிலைமை சீராகி மீண்டும் வாக்குப்பதிவு வழக்கம்போல் நடைபெற்றது.

Hindusthan Samachar / GOKILA arumugam