Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீவில்லிபுத்தூர் , 09 ஏப்ரல் (ஹ.ச.)
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா
அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் உள்ள வடக்கு அச்சம்தவிழ்த்தான் பகுதியின் மக்கள், கிராமத்தின் பெயரை ஜாதி பெயரை நீக்கி அதிகாரப்பூர்வமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டு எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக பரசேரி என்ற ஜாதி பெயரை பயன்படுத்தி வந்தனர்.
அரசு நடவடிக்கையின் அடிப்படையில், கிராம சபை கூட்டங்களில் பலமுறை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை அரசாங்க அறிவிப்பு வெளியிடப்படாததால், கிராம மக்கள் 130 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பார்கள் என உறுதி செய்துள்ளனர்.
மக்கள் கூறியது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA