புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026-அமைதியான முறையில் நிறைவடைந்த வாக்குப்பதிவு!
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
புதுச்சேரி


புதுச்சேரி


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அதன்படி, கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலம் வாக்குப்பதிவில் வரலாற்றை படைத்துள்ளது.

இதில், 5 மணி நிலவரப்படி 86.87 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருந்த நிலையில், தற்போது 6 மணி நிலவரப்படி 89.08 % சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது புதுவையில் மொத்தம் 83.4 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு தகவல் ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.

அதன்படி, இந்த தேர்தலில் சுமார் 8,25,820 பேர் வாக்களித்துள்ளனர்.

1,24,819 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV