Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 09 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்தத்துக்கு இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய ஜலசந்தியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவைத்துள்ளது.
இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்துக்காக நாளை (ஏப்ரல் 10-ம் தேதி) இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போரில் பாகிஸ்தான் வெளிப்படையான மத்தியஸ்தராக அறியப்பட்டாலும் பின்னணியில் சீனாவின் பங்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார்.
இந்தக் குழுவில் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்
Hindusthan Samachar / vidya.b