Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா , 09 ஏப்ரல் (ஹ.ச.)
பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கேடிஆர்) ஜகித்யாலா நோக்கி பயணமாகியுள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ஜீவன் ரெட்டியை அவரது இல்லத்தில் இன்று சந்திக்க உள்ளார்.
கேடிஆர் வருகையை முன்னிட்டு ஜகித்யாலா புறநகர் பகுதிகளில் பிஆர்எஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அங்கிருந்து பைக் ராலியுடன் ஜீவன் ரெட்டி இல்லத்திற்குச் செல்லும் திட்டமும் உள்ளது.
அவரது வருகையால் ஜகித்யாலா நகரம் முழுவதும் பிஆர்எஸ் கட்சியின் அடையாள நிறமான பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது.
இந்த சந்திப்பில் கேடிஆருடன், ஒருங்கிணைந்த கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஆர்எஸ் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநில அரசியல் நிலை குறித்து ஆலோசனை நடத்திய பின், ஜீவன் ரெட்டியை பிஆர்எஸ் கட்சியில் சேர அழைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீவன் ரெட்டி 1984ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து வட தெலங்கானாவில் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
அவர் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், மூன்று முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2014க்குப் பிறகு வட தெலங்கானாவில் இருந்து காங்கிரஸின் ஒரே எம்எல்ஏவாகவும் இருந்தார்.
2018 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அவர், 2019ஆம் ஆண்டு பட்டதாரிகள் தொகுதியில் இருந்து எம்எல்சியாக தேர்வாகி சட்டமன்ற மேலவையில் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆனால் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஆதரவாளர்களுக்கு குறைந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால், கடந்த மாதம் 25ஆம் தேதி அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA