Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் சமரச நாள் விழிப்புணர்வு பேரணியானது இன்று தென்காசி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைமை நீதிபதி ராஜவேலு தலைமையில் நடைபெற்ற இந்த சமரச நாள் விழிப்புணர்வு பேரணிக்கு முன்னதாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் சமரச நாள் குறித்தான உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நிலையில், தொடர்ந்து பேரணியாக தென்காசி- திருநெல்வேலி சாலையில் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குறிப்பாக, தென்காசி போக்குவரத்து பணிமனை வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் பார் கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN