கன்னியாகுமரியில் நா.த.க வேட்பாளரை ஆதரித்து பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த சீமான்..!
கன்னியாகுமரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவதாக அ
சீமான்


கன்னியாகுமரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அந்த கூப்பனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்... ஆனால் முதலமைச்சர் பதவியை எனக்கு தருவீர்களா ? என வினவினார். மேலும் அந்த கூப்பனை பெற்றுக் கொண்டு சாராயம் குடித்து உயிரிழந்த எனது சொந்தங்களின் உயிரை திருப்பித் தாருங்கள் எனவும் கோரினார்.

காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் ஆனால் ஏன் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு போடுங்கள் என்ற சீமான், உங்களுக்கு ஒன்னுனா நான் தான் வருவேன் ராகுல் வரமாட்டார் எனவும் ஆவேசமாக பேசினார்.

கடந்த காலத்தை மறந்தவனுக்கு ஏதடா நிகழ்காலம் நிகழ்காலத்தை மறந்தவனுக்கு ஏதடா எதிர்காலம் என்றும் இலங்கையில் தமிழக மக்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் மற்றும் திமுக என்றும் குற்றம்சாட்டினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே கல்விக் கொள்கை என கூறுவார்கள் ஆனால் ஒரே தண்ணீர் தர மாட்டார்கள் என்ற சீமான், காவிரி நீர் கர்நாடகாவிற்கு முல்லைப் பெரியாறு நீர் கேரளாவிற்கு, ஆனால் நமக்கு மட்டும் அணு உலை என்றால் என்ன நியாயம் என்றார்.

15 ஆம் நூற்றாண்டில் மலையாளம் என்கிற மொழியே இல்லை என்ற சீமான், வணக்கம் சொல்லும் இடத்தில் நமஸ்காரம் என சொன்னான் மலையாளமாக மாறிவிட்டது என்றார்.

இன்று தமிழ் மொழி சிதைந்து அழிந்து போகிறது இதைப்பற்றி பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக யாராவது கவலைப்படுகிறார்களா? என்றும் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இறுதியாக தனது பாணியில் பாடல் ஒன்றை பாடி அங்கு இருந்த மக்களை வெகுவாக கவர்னர் வாக்குகளை சேகரித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P