தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்வர்-காரைக்குடி வேட்பாளர் பிரபு அனுமதி கேட்ட கடிதம் வெளியாகி அதிர்ச்சி
சிவகங்கை, 09 ஏப்ரல் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளரும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான டாக்டர் டி
விஜய்


சிவகங்கை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாளை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளரும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான டாக்டர் டி கே பிரபு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல் துறையினரிடம் அவர்களது கட்சித் தலைவர் விஜய் பரப்பரை மேற்கொள்வதற்காக அனுமதி கேட்டு கடிதம் வழங்கியுள்ளார்.

அதில் 500 நபர்கள் பங்கேற்க உள்ளனர் என்று குறிப்பிட்டு அனுமதி கடிதம் கொடுத்துள்ளனர்.

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலை அமைந்துள்ள இடத்தை இதற்காக தவெகவினர் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தை ஆய்வு மேற்கொண்டு தற்பொழுது அனுமதியும் வழங்கி உள்ளார்.

இந்நிலையில், 500 நபர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கேட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

சுமார் 15000 நபர்கள் கூடுவார்கள் என்று வேட்பாளருக்கு தெரிந்திருந்தும் வேண்டுமென்றே 500 நபர்கள் தான் வருவார்கள் என்று அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டும் இன்றி 500 பேருக்கு அனுமதி கேட்ட நிலையில் காவல்துறையினர் அதற்கு தகுந்தார் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அங்கு அதிகம் பேர் கூடும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P