புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் அழைப்பு- கடைசி நிமிடத்திலும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தல்
சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச) புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் கடைசி நிமிடத்திற்கும் விழிப்புடன் இருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக வெற்றிக் கழக
TVK Vijay


N


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச)

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் கடைசி நிமிடத்திற்கும் விழிப்புடன் இருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை தூண் என்றும், மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதன் மூலம் நல்லாட்சி உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கடைசி நேரங்களில் வாக்குச்சாவடிகளுக்கு வராதவர்கள் கூட தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் வாக்குப்பதிவில் பங்கேற்பது ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் என்றும், ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதால் அதை தவறவிடக்கூடாது என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ