Enter your Email Address to subscribe to our newsletters

வாணியம்பாடி, 09 ஏப்ரல் (ஹி.ச)
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ரயில்களில் கடத்தல் சம்பவங்களை தடுக்க ஆர்.பி.எப் தேர்தல் சிறப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வாணியம்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி டபுள் டெக்கர் ரயிலில் பயணம் செய்த நபரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில், அந்த நபரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 23 கிராம் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சுமார் ரூ.7.38 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ