Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
நடிகர் விஜய் அரசியலில் முழுநேரமாக ஈடுபட வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;
விஜய் அரசியலில் புதியவராக இருப்பதால் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், மக்களை ஈர்க்கும் தன்மை மட்டும் போதாது, அரசியலில் முழுமையான ஈடுபாடு அவசியம் என்று கூறினார்.
மேலும், அரசியலில் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு தேவையான நேரம் மற்றும் அர்ப்பணிப்பு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜயின் அரசியல் பயணம் குறித்து இப்போது மதிப்பிடுவது மிக விரைவானது என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கப்பட்டபோது, “ஏன் அவருடன் கூட்டணி அமைக்க வேண்டும்? என்று பதிலளித்தார்.
தற்போது தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், அதிமுகவே தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்துகிறது என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P