திமுகவின் பிரச்சார பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் - பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.) வானகரம் செட்டியார் அகரம் சந்திப்பு அருகே டாட்டா ஏஸ் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மரித்து சோதனையிட்ட போது அதில் திமுக கட்சியின் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இருந்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி ஒரு பாக்ஸில் 1
Gg


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

வானகரம் செட்டியார் அகரம் சந்திப்பு அருகே டாட்டா ஏஸ் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மரித்து சோதனையிட்ட போது அதில் திமுக கட்சியின் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இருந்துள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி ஒரு பாக்ஸில் 100 பிரசுரங்கள் வீதம் மொத்தம் 60 பாக்ஸ்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அனைத்தையும் பறிமுதல் செய்து மதுரவாயில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

பிரச்சாரப் பதாகைகளை மாதவரத்தில் இருந்து செந்நீர் குப்பம் எடுத்துச் செல்வதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ