Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 மே (ஹி.ச)
உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தேச வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களின் வியர்வையை சிந்தி, கடின உழைப்பை அர்ப்பணித்து வரும் ஒவ்வொரு தொழிலாளரும் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள்.
அவர்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் தான் இந்தியாவின் முன்னேற்றப் பாதையை உருவாக்குகிறது, என்று பாராட்டியுள்ளார்.
மேலும், எந்தவித அங்கீகாரமும் எதிர்பார்க்காமல் அமைதியாக தங்கள் பணியை செய்து கொண்டு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து வரும் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் மரியாதை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உழைப்பாளர்களின் நலன் காக்கப்படும்போது மட்டுமே, ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையானதாக இருக்கும். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதே உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம், எனவும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், சமத்துவமும் சமூக நீதி நிலைநிறுத்தப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்றும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டி, அவர்களுக்கான நலத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ