இந்திய பொருளாதாரத்திற்கு புதிய மைல்கல்- ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி!
புதுடெல்லி, 01 மே (ஹி.ச.) இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல், 2026 ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ரூ.2.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமானதிலிருந்து பதிவான மிக உயர்ந்த மாதாந்திர வசூல் இதுவாகும். இத
ஜிஎஸ்டி


புதுடெல்லி, 01 மே (ஹி.ச.)

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல், 2026 ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ரூ.2.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகமானதிலிருந்து பதிவான மிக உயர்ந்த மாதாந்திர வசூல் இதுவாகும்.

இது, நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் வலுவாக முன்னேறி வருவதை வெளிப்படுத்துகிறது.

கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 8.7 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம், உற்பத்தி, சேவைத் துறை ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த வசூல் உயர்வு, இந்திய பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதை மட்டுமல்லாமல், வரி நிர்வாகத்தின் செயல்திறனும் மேம்பட்டிருப்பதை காட்டுகிறது.

டிஜிட்டல் கண்காணிப்பு, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் வரி செலுத்துவோரின் இணக்கம் ஆகியவை வசூல் உயர்வுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது,

ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், அரசின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும்.

இதன் மூலம் உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்கள், மற்றும் வளர்ச்சி சார்ந்த முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்க வாய்ப்பு உருவாகும்.

இந்த சாதனை, இந்திய பொருளாதாரத்தின் தாங்கும் திறனையும், வளர்ச்சிப் பாதையில் அது தொடர்ந்து பயணித்து வருவதைவும் உறுதிப்படுத்துகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P