சிலிண்டர் விலை உயர்வு- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை, 01 மே (ஹி.ச.) வணிக எரிவாயு (LPG) சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மக்களின் துயரை எண்ணிப் பார்த்து
முதலமைச்சர்


சென்னை, 01 மே (ஹி.ச.)

வணிக எரிவாயு (LPG) சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது,

மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள். தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள்மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

மேலும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்திலும் அதன் பலன் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.

தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழலை காரணம் காட்டி, மக்களின் நலனைப் பொருட்படுத்தாமல் எரிவாயு விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் குடும்பச் செலவினத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக வீட்டு உபயோகச் செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.

எனவே, இந்த LPG விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam