அடடே தங்கம், வெள்ளி விலை இவ்வளவு குறைந்ததா?
சென்னை, 01 மே (ஹி.ச.) கடந்த மார்ச் மாதம் ஈரான் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வந்தது. அந்த வகையில் நேற்று மட்டுமே, காலை, மாலை என இரு வே
தங்கம்


சென்னை, 01 மே (ஹி.ச.)

கடந்த மார்ச் மாதம் ஈரான் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது.

தொடர்ந்து ஏப்ரல் மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வந்தது.

அந்த வகையில் நேற்று மட்டுமே, காலை, மாலை என இரு வேளைகளும் தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது.

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் கணிசமாக உயர்ந்தது.

நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மாத தொடக்கமான இன்று (மே1) தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.11,750க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.94,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P