Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 01 மே (ஹி.ச.)
கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு கேரளா செண்டை மேளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரோடும் வீதிகளின் வழியாக கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேரோடும் வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்த திருத்தேரில் இருந்த பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழங்களை உடைத்து சாமி தரிசனம் செய்தனர்
இந்த தேரோட்டத்தின் போது தேரோட்டத்தில் பங்கேற்று இருந்த பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமியர்கள் மோர் வழங்கினார்.
Hindusthan Samachar / ANANDHAN