கள்ளழகர் வைபவம் - வைகை தென்கரையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
மதுரை, 01 மே (ஹி.ச.) மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய புனித நிகழ்வை தரிசித்
அழகர்


மதுரை, 01 மே (ஹி.ச.)

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய புனித நிகழ்வை தரிசித்த பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நோக்கில் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் திரண்டு வருகின்றனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

குடும்பத்துடன் வந்த பலரும் பாரம்பரிய வழக்கப்படி முடிகாணிக்கை செலுத்தி, பின்னர் வைகையில் புனித நீராடிவிட்டு கள்ளழகரின் அருளைப் பெறுகின்றனர்.

இதனால் வைகை தென்கரை பகுதி பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு, பக்தி பரவசத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P