Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானலில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலா தளங்களுக்கு செல்ல அனுமதி மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து, வத்தலகுண்டு–கொடைக்கானல் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நிலைமையை சமாளிக்க மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான
மோயர் சதுக்கம்
பைன் மர காடுகள்
குணா குகை
தூண் பாறை
உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் அனுமதி சீட்டுகளை எளிதாக பெறும் வகையில்
பிரையன்ட் பூங்கா
கோக்கர்ஸ் வாக்
பேருந்து நிலையம் உள்ளிட்ட மொத்தம் 5 இடங்களில் தற்காலிக கவுன்டர்கள் அமைக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சுற்றுலா பயணிகளுக்கு சிரமமின்றி தளங்களை பார்வையிட வழி வகை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam