வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நள்ளிரவில் பார்வையிட்ட மம்தா பானர்ஜி
கொல்கத்தா, 01 மே (ஹி.ச.) 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அ
K


கொல்கத்தா, 01 மே (ஹி.ச.)

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாபனிபூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தெற்கு கொல்கத்தாவில் உள்ள சக்வத் நினைவு பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவில் ஆய்வு

இந்த பள்ளிக்கூடத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நள்ளிரவு திடீரென சென்றார்.

அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடும் நடைபெறக்கூடாது.

முறைகேடு செய்ய முயற்சி நடைபெற்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA