மணிமுத்தாறு அணையில் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு
நெல்லை, 01 மே (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக மழை நிலவரத்தையும், நீர்மட்டத்தையும் கருத்தில் கொண்டு காத்திருந்த நில
Manimuthar Falls


நெல்லை, 01 மே (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக மழை நிலவரத்தையும், நீர்மட்டத்தையும் கருத்தில் கொண்டு காத்திருந்த நிலையில், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நீர் திறப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நீர் திறப்பின் மூலம் அயன் சிங்கப்பட்டி, ஜமீன் சிங்கப்பட்டி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பாங்குளம், வைரவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளன.

மொத்தம் சுமார் 2756.62 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன நிலங்களுக்கு இந்த நீர் வழங்கப்பட உள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி, நீர்வரத்து மற்றும் அணையில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு, வினாடிக்கு 45 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் திறப்பு கார் பருவ விவசாயத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நெல், கரும்பு போன்ற பயிர்கள் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றும். மேலும் மழை நிலவரம் மற்றும் நீர் சேமிப்பு அதிகரித்தால், தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கும் அளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN