மே தினம் விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் பயணம்
சென்னை, 01 மே (ஹி ச.) மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பொதுமக்கள் சுலபமாகப் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவுப் போக்க
Special Buses


சென்னை, 01 மே (ஹி ச.)

மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பொதுமக்கள் சுலபமாகப் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட தகவலின்படி, 30.04.2026 முதல் 01.05.2026 அதிகாலை 3 மணி வரை, வழக்கமான 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

இதனால் மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இன்று (01.05.2026) பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ