Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச.)
உலக உழைப்பாளர்களின் திருநாளாம் மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிவப்பு சீருடையில் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது,
உரிமைக்காகவும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் முதன் முதலில் மே முதல் நாளை சென்னையில் தான் கொண்டாடத் தொடங்கினோம்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் தான் சென்னை மாநகரில் முதன்முதலில் இந்த மே முதல்நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.
உழைப்புக்கு ஏத்த உதியும் தொழிலாளர்களுக்கான உரிமை அதேபோல் நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்பிற்கான பலன் வரும் நான்காம் தேதி பெறவிருக்கிறோம், அதில் ஒரு துளி அளவும் எந்த மாற்றமும் இல்லை.
கருத்துக்கணிப்பு அடிப்படையில் நான் சொல்கிறேன் என்ற அவசியம் இல்லை கழக உணர்வை உணர்ந்து கொண்டிருக்க கூடிய காரணத்தினால் அந்த கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேன் தவிர வேறில்லை.
அதே நேரத்தில் முதல் நாளை தொழிலாளருக்கு உரிய மரியாதை மதிப்பை உரிமையை இன்று கொண்டாட கூடிய வகையில் இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம்.
மே முதல் நாள் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அரசு விடுமுறையாக அறிவித்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கினார், ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக மட்டுமில்லாமல் அந்த விடுமுறை நாளை சட்டம் ஆக்கிக் கொடுத்தவர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற நம்முடைய கலைஞர்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் மே முதல் நாள் கொண்டாடப்பட்டு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது இந்தியா முழுவதும் இந்த விடுமுறை நாளை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கலைஞர் அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் குரல் எழுப்பி பிரதமராக இருந்த வி.பி சிங் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அரசு விடுமுறையாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது..
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்ட நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும்.
இந்த சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்வது எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தோடுதான் அந்தக் கொள்கையோடு தான் நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் அது தொடரும் என்று கூறினார்.
மே தின நினைவு பூங்காவை கலைஞர் தான் உருவாக்கி தந்துள்ளார் இந்த பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தை கலைஞர் தான் உருவாக்கித் தந்தது மட்டும் இல்லாமல் அது எப்படி அமைய வேண்டும் என்று பல முறை இந்த இடத்திற்கு நேரடியாக வந்து அதனை சரி செய்து உருவாக்கித் தந்துள்ளார்.
தொழிலாளர்கள் மீது தொழிலாளர்களின் உரிமை மீது கலைஞர் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் மட்டுமல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில், திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, துணை பொது செயலாளர் ஆ ராசா எம்.பி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சி.வெ.கணேசன் மா. சுப்ரமணியன், பி கே சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகளும், தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கருப்பு சிவப்பு சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ