Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 01 மே (ஹி.ச.)
மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளது. இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரோஜா பூங்கா படிமட்டங்களை கொண்டது.
இந்த பூங்காவில் 40 ஆயிரம் ரோஜா செடிகளில் 4300 வகையான ரோஜா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த ரோஜா பூங்கா கார்டன் ஆஃப் தி எக்ஸலன்ஸ் என்ற விருதை சர்வதேச ரோஜா சம்மேலனதால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்களைக் கொண்ட ஒரே ரோஜா பூங்கா என பெருமையை கொண்டுள்ளது.
ரோஜா பூங்காவில் மலர்ந்துள்ள பலவகையான பல வண்ணங்களில் பூத்துள்ள ரோஜாக்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு ரோஜா மலர்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் இத்தனை வகையான ரோஜாக்களை வேறு எந்த பூங்காவிலும் கண்டதில்லை என ஆச்சரியத்துடன் ரோஜா மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN