பதநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்...!
தமிழ்நாடு, 01 மே (ஹி.ச.) பதநீர் (Palm Neera) என்பது பனை மரப் பாளையில் இருந்து சேகரிக்கப்படும் சத்துமிக்க, இயற்கையான இனிப்பு பானமாகும். இது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடனடி ஆற்றலை அளித்து, செரிமானத்தைச் சீராக்கி, எலும்புகளை வலுப்படுத்துகிறது. இ
பா


தமிழ்நாடு, 01 மே (ஹி.ச.)

பதநீர் (Palm Neera) என்பது பனை மரப் பாளையில் இருந்து சேகரிக்கப்படும் சத்துமிக்க, இயற்கையான இனிப்பு பானமாகும்.

இது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடனடி ஆற்றலை அளித்து, செரிமானத்தைச் சீராக்கி, எலும்புகளை வலுப்படுத்துகிறது.

இதில் கால்சியம், வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் உள்ளன.

பதநீரின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:உடல் குளிர்ச்சி: கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் பாதை எரிச்சலைத் தணிக்கும் சிறந்த இயற்கை குளிர்பானம்.உடனடி ஆற்றல்: இயற்கையான சர்க்கரை மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், சோர்வை நீக்கி உடனடி சக்தியை அளிக்கிறது.

எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம்: கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால், எலும்புத் தேய்மானம், மூட்டுவலி மற்றும் பற்கள் தொடர்பான கோளாறுகளைத் தடுக்கிறது.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல்:

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பெண்களுக்கான ஆரோக்கியம்:

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியம்:

கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தைக் குறைத்து, பித்த அதிகரிப்பைப் போக்குகிறது

பதநீர் குடிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

பதநீர் சேகரிக்கப்படும் போது நொதிப்பதைத் தடுக்க,பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவப்படுகிறது.

அதனால் சீக்கிரம் புளித்து விடும் தன்மை கொண்டதால், சேகரித்த உடனே பருகுவது சிறந்தது

Hindusthan Samachar / Durai.J