Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச)
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள மே தின தூணில் மரியாதை செலுத்திய பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மிக வலுவானது. தமிழ்நாட்டு மக்கள் அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர்.
பாசிச ஆட்சிக்கு எந்த காலத்திலும் தமிழகத்தில் இடமில்லை என தெரிவித்தார்.
மேலும், தனது இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்ததாக கூறிய விவகாரத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் தம்மீது புகார் அளித்துள்ளதற்கான கேள்விக்கு,
எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.
திமுகவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்த கேள்விக்கு,
முதலில் தேர்தல் முடிவு வெளியாகட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ