Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச.)
இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து உருவான
'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற
“அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி Dr சாருலதா மணி தனது புதிய சுயாதீன பாடலான தென்றலில் மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார்.
திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக தென்றலில் உருவாகியுள்ளது.
தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது.
சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை.
இவர் ஆஸ்திரேலியா கிரிஃபித் யுனிவர் சிட்டியில் பிஎச்டி& Postdoctoral Fellowship முடித்துள்ளார்.
இசை அமைப்பாளராக இவரின் புதிய அவதாரம் வரவேற்கத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J