தொடரும் ஹோர்முஸ் ஜலசந்தி மோதல் - உலகளாவிய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட வாய்ப்பு
ஈரான், 01 மே (ஹி.ச.) அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் தணிவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அமெரிக்க நிலைகளுக்கு எதிராக நீண்ட மற்றும் வேதனையான தாக்குதல்களை நடத்துவோம்
Strait of Hormuz Conflict Continues


ஈரான், 01 மே (ஹி.ச.)

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் தணிவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

அமெரிக்க நிலைகளுக்கு எதிராக நீண்ட மற்றும் வேதனையான தாக்குதல்களை நடத்துவோம் என ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த முக்கிய கடல்வழி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளது. பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் போர்நிறுத்தம் ஏற்பட்டபோதிலும், தனது எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்க தடையிற்கு பதிலடியாக ஈரான் ஜலசந்தியை தொடர்ந்து தடுத்து வைத்துள்ளது.

உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நெருக்கடியை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு நிர்பந்திக்க புதிய ராணுவ தாக்குதல்களை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறார். இந்த சூழலால் உலகளாவிய எரிசக்தி விலைகள் ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ளன.

நீண்டகாலமாக ஜலசந்தி மூடப்பட்டிருப்பது உலக வளர்ச்சியிலும் வறுமை நிலையிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஈரான் ஜலசந்தி மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்வதாலும், சர்வதேச பதற்றம் உச்சத்தில் இருப்பதாலும், பரந்த அளவிலான மோதலுக்கான வாய்ப்பு பெரிதாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b