த.வெ.க தலைவர் விஜய் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து
சென்னை, 01 மே (ஹி.ச.) ஆண்டுதோறும் மே 1-ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறது. தொழிலாளர் இயக்கத்தின் போராட்டங்களையும் சாதனை
TVK President Vijay Extends May Day Greetings


சென்னை, 01 மே (ஹி.ச.)

ஆண்டுதோறும் மே 1-ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறது.

தொழிலாளர் இயக்கத்தின் போராட்டங்களையும் சாதனைகளையும் நினைவுகூரும் இந்த நாள், நியாயமான நடைமுறைகள், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்குமான கண்ணியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

அந்தவகையில், இன்று கொண்டாடப்பட்டு வரும் தொழிலாளர் தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்க, உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம்.

உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b