Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 01 மே (ஹி.ச.)
திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நிர்வாகத் திறமையால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச சூழ்நிலைகள், குறிப்பாக போர் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை மாற்றங்கள் பல நாடுகளில் எரிபொருள் விலைகளை பாதித்துள்ள நிலையில், இந்தியாவில் பொதுமக்கள் மீது அதன் தாக்கம் குறைவாக இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு தற்காலிகமானது என்றும், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அதை அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், “அது எக்ஸிட் போல் தானே தவிர, எக்சாக்ட் போல் அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P