Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 01 மே (ஹி.ச.)
ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பவன் வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பி.ஆர்.எஸ் வொர்க்கிங் பிரசிடெண்ட் ராமா ராவ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தல்கள் முடிந்ததும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலைகளை உயர்த்துவது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பழக்கமாகி விட்டது.
80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
மோடி அரசின் மே தின பரிசு என்றால் அது விலை உயர்வே,
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.
ஆனால் சிலிண்டர் விலை மட்டும் வானளாவ உயர்கிறது.
மாநில அரசையும் குறிவைத்து பேசிய அவர்,
தொழிலாளர் நலனில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை.
தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
ராகுல் காந்தி ஆட்டோவில் ஏறியதால் அந்த ஓட்டுநர் தனது இரண்டு ஆட்டோக்களையும் விற்று விட்டார்.
சிலரின் வருகை வாழ்க்கையை மாற்றும் வகையில் தாக்கம் ஏற்படுத்துகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறை வேற்றப்படாதது,மக்கள் நல திட்டங்களில் அரசுகளின் செயல்பாடு குறைபாடு உள்ளிட்ட பல விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA