Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 01 மே (ஹி.ச.)
பி.ஆர்.எஸ். தலைவர் கே.சி.ஆர் மீது தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் ஐதராபாத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க மாநில அரசு மேற்கொண்டு வரும் ‘ஹைட்ரா’ நடவடிக்கைகளுக்கு கே.சி.ஆர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நகரை சுற்றியுள்ள பல குளங்கள் மற்றும் ஏரிகளை பி.ஆர்.எஸ். கட்சியினரே ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனால் தான் ஹைட்ரா நடவடிக்கைகள் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
குளங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தால் கே.சி.ஆருக்கு என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பிய மகேஷ் கவுட், ஹைட்ரா விதிமுறைகளை கே.சி.ஆர் முழுமையாக படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், டி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவால் தான் கே.சி.ஆர் மீண்டும் அரசியலில் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளார்.
கவிதாவின் அழுத்தம் காரணமாகவே அவர் வெளியில் வருகிறார். மக்கள் நலனுக்காக அல்லாமல், தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே கே.சி.ஆர் மீண்டும் செயல்பட்டு வருகிறார் என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாக தெரிவித்த மகேஷ் கவுட், மாநிலத்தில் விரைவில் நியமன பதவிகள் நிரப்பப்படும் என்றும் கூறினார்.
இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசிய அவர், அதற்கான இறுதி முடிவை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியே எடுப்பார் என்று கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA