Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 01 மே (ஹி.ச.)
காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, கோவில் தரிசனம் செய்து, பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் நிலவரம் மற்றும் கருத்துக் கணிப்புகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கருத்துக் கணிப்புகள் குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
அவை வெறும் கணிப்புகள் மட்டுமே.
மக்களின் உண்மையான தீர்ப்பே வாக்கு எண்ணிக்கை நாளில் வெளிப்படும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
அதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும், என்றார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், அந்த நம்பிக்கையிலேயே மக்கள் மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், அதற்கான மாற்றாக அதிமுகவை மக்கள் பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.
கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, மக்களிடம் அதிமுகவின் சாதனைகள் மற்றும் கொள்கைகளை கொண்டு சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P