Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 01 மே (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தமிழக முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தொடங்கி வைத்தார்.
தொழிலாளர் தினத்தை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி,
தமிழக அரசின் செயல்பாடுகள், அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வரும் மே 4-ஆம் தேதி திமுகவின் தேர்தல் வெற்றி சிறப்பாக கொண்டாடப்படும். தமிழக மக்கள் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு அளித்து, மு.க. ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
அவரது தலைமையில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது.
கல்வி, சுகாதாரம், மகளிர் நலம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த சாதனைகளே திமுகவுக்கு மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றுத் தரும்.
தமிழக மக்களுக்கான பல்வேறு புதிய நலத்திட்டங்கள் மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்படும்.
மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் பொன்முடி உறுதியளித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P