கருத்துக்கணிப்புகள் பல வகை இருந்தாலும், உண்மை வாக்கு எண்ணிக்கையில் தெரியும்– வைகோ
சென்னை, 01 மே (ஹி ச.) மே தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவையின் கொடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ
Vaiko


சென்னை, 01 மே (ஹி ச.)

மே தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவையின் கொடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

1967ஆம் ஆண்டு அண்ணா மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்ததை நினைவுகூர்ந்தார்.

மத்திய அரசும் மே தினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தாம் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து அன்றைய மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இரு அவைகளிலும் அறிவித்ததாக தெரிவித்தார்.

தற்போதைய மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு, முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளது என்றும், தொழிலாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து அவர் கூறுகையில், பல கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனக் கூறுகின்றன.

சில கருத்துக்கணிப்புகள் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக உள்ளன.

ஆனால் இறுதி நிலை வாக்கு எண்ணிக்கையின் போது தான் தெரியவரும் என்றார்.

மேலும், திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், மே 4ஆம் தேதி உண்மை நிலை வெளிப்படும் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ